சுகர் லெவலை கட்டுப்படுத்த மாலையில் சில பழக்க வழக்கங்களை பின்பற்றினால், ஆச்சரியமளிக்கும் விளைவுகளை காண முடியும்.
தினமும் முடிந்தவரை சீக்கிரமாகவும், ஒரே நேரத்திலும் இரவு உணவை உட்கொண்டால் இரவு நேரங்களில் சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இருக்கும்.
எப்போதும் உண்பதை விட இரவில் குறைவாக உணவை உட்கொள்வதன் மூலம் திடீரென இரவில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாவதை தவிர்க்கலாம்.
இரவில் அதிக நார்ச்சத்து மிக்க உணவை உட்கொள்வதால், சர்க்கரை அளவு குறைந்து, சீரான ஆற்றல் வெளிப்பாடும், நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
இரவு உணவுக்குப் பிறகு நடப்பது இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.
மற்ற திரவங்களை விட அதிக தண்ணீர் மற்றும் மூலிகை தேநீர் குடிப்பதில் அதிக கவனம் செலுத்துங்கள். சரியான அளவு திரவங்களை குடிப்பது சிறுநீரக செயல்பாட்டிற்கு இன்றியமையாதது.
தரமான தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். இது உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. தினமும் ஏழு மணி நேரத்திற்கு குறையாமல் தூங்குங்கள்.
இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து தேவைப்படும்போது உணவுமுறைகள் மற்றும் வாழ்க்கைமுறைகளில் பொருத்தமான மாற்றங்களைச் செய்வது நல்லது.