சத்துக்கள் முழுமையா கிடைக்க ... ‘இவற்றை’ சமைக்க வேண்டாம்... அப்படியே சாப்பிடுங்க...!

Vidya Gopalakrishnan
Nov 14,2023
';

ஊட்டச்சத்து

சமைக்கும் போது சில உணவுகள், அதன் ஊட்டச்சத்தை இழக்க கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், சமைக்காமல் சாப்பிட வேண்டிய சில உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

';

பூண்டு

பூண்டை பச்சையாக சாப்பிடும் போது அதிக பலனை கொடுக்க கூடியது. பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் சிறந்த கலவை சூடுப்படுத்தப்படும் போது, அதன் வீரியத்தை இழக்கக் கூடும்.

';

கிரீன் டீ

கிரீன் டீயை அளவிற்கு அதிகமாக சூடேற்றுவதால், அதில் உள்ள ஆக்ஸினேற்றங்கள் வலுவிழக்கும். எனவே கிரீன் டீயை கொதிக்க விடுவதை விட, சூடான தண்ணீரில் 3 நிமிடம் வைத்து அருந்துவது நல்லது.

';

தேன்

ஆக்ஸிஜனேற்றிகல் மற்றும் என்சைம்கள் நிறைந்த தேனை சூடாக்கும் போது, அதன் மதிப்பு மிக்க சத்துக்கள் அழியக் கூடும்.

';

பாதாம்

பாதாம் பருப்பை சூடாக்கினால் அதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் சிதைந்து விடும். எனவே பச்சையாக உட்கொள்வதே சிறந்தது. ஊற வைத்து சாப்பிடுவதும் சிறந்தது.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியை அதிக நேரம் சமைப்பதால், அதன் ஊட்டசத்துக்கள் குறிப்பாக விட்டமின் சியை இழக்க நேரிடும்.

';

தக்காளி

தக்காளியை சமைத்து சாப்பிடுவதால், அதிலுள்ள விட்டமின் சி உடையலாம். அதனால் அதனை முடிந்த வரை பச்சையாக சாப்பிடுங்கள்

';

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் சூடு படுத்தப்படும் போது, அதில் உள்ள ஆக்ஸீஜனேற்றங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் சிதைகின்றன. எனவே அதனை சாலட்டுகளில் பயன்படுத்துவதே சிறந்தது.

';

தயிர்

புரோபயோடிக் தன்மை நிறைந்த தயிரை சூடுபடுத்தாமல் சாப்பிடுவதே சிறந்தது. சூபடுத்தினால் அது புரோபயோடிக் தனமையை இழந்து விடும்.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story