இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சிபில் ஸ்கோர் குறித்த முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் கீழ் பல விதிகள் இடம்பெற்றுள்ளன.
புதிய விதிகள் 26 ஏப்ரல் 2024 முதல் அமலுக்கு வரும். ஏப்ரல் மாதமே இதுபோன்ற விதிகளை அமல்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி எச்சரித்திருந்தது. இதன் கீழ் மொத்தம் ஐந்து விதிகளை ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது.
ஒரு வங்கி அல்லது NBFC வாடிக்கையாளரின் கடன் அறிக்கையைப் பார்க்கும்போதெல்லாம், வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட வேண்டும் என்று மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வாடிக்கையாளரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, கடன் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை முழுமையான கிரெடிட் ஸ்கோரை இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
வாடிக்கையாளர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என புகார் அளிக்கும் முன்னர் (டீஃபால்ட் ரிப்போர்ட்) அதை பற்றி வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடன் தகவல் நிறுவனம் 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர் புகார்களை தீர்க்கவில்லை என்றால், ஒவ்வொரு நாளும் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும்.