இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நீரிழிவு நோயாளிகள் குடிக்க வேண்டிய சில சாறுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பாகற்காய் இன்சுலினை சரியான அளவில் பராமரிக்க உதவுவதோடு குளூகோஸ் அளவுகளை கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகின்றது. நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் பாகற்காய் சாறு குடிப்பது நல்லதாகும்.
பாலக் கீரையில் க்ரோமியம் உள்ளது. இது இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி அதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
நெல்லிக்காயில் அதிக அளவு க்ரோமியம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடலில் இன்சுலின் சென்சிடிவிடியை மேம்படுத்துகிறது . நெல்லிக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகின்றது.
நூக்கல் என்றும் அழைக்கப்படும் நூல்கோலில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் காணப்படுவதாக அய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் நார்ச்சத்தும் இதில் அதிகமாக காணப்படுகின்றது.
தக்காளி சாறில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு இதன் கிளைசெமிக் குறியீடும் (ஜிஐ) மிக குறைவாகும். இதை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளலாம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.