புரதங்கள் உடலின் செயல்பாடுகளுக்கு முக்கியம். முட்டையை விட அதிகம் புரதம் கொண்ட சைவ உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கொண்டைக்கடலையை எந்த வடிவத்திலும் சாப்பிட்டாலும் நல்ல சத்து கிடைக்கிறது.
100 கிராம் பாதாம் பருப்பில் 21-22 கிராம் புரதம் உள்ளது. இது உடலுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது.
100 கிராம் பூசணி விதையில் 19 கிராம் புரதம் உள்ளது. இதனை தினசரி சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
100 கிராம் பருப்பில் சுமார் 19 கிராம் புரதம் உள்ளது. இது முட்டையில் கிடைப்பதை விட அதிகம் ஆகும்.
வேர்க்கடலையில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. 100 கிராம் வேர்க்கடலையில் 26 கிராம் புரதம் உள்ளது.
பாலாடைக்கட்டியில் அதிக ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இதில் முட்டையை விட அதிக புரதம் உள்ளது.
பாதாம் வெண்ணெய் வேர்க்கடலை வெண்ணெயை விட ஆரோக்கியமானது. காரணம் இதில் அதிக வைட்டமின்கள் உள்ளன.
100 கிராம் சோயாபீன் கிட்டத்தட்ட 36 கிராம் புரதத்தை கொண்டுள்ளது. இவை உடலுக்கு ஆற்றலை தருகிறது.