கீரை மற்றும் தக்காளி போன்றவற்றில் பியூரின் உள்ளது. யூரிக் அமில நோயாளிகள் பியூரின்கள் கொண்ட உணவுகளை தவிர்க்கவேண்டும்.
யூரிக் அமிலம் உள்ள நோயாளிகள் மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையைப் பின்பற்ற வேண்டும். இதனுடன், உங்கள் வாழ்க்கை முறையிலும் சில ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
யூரிக் அமிலத்தைக் குறைக்கும் சில எளிய உடற்பயிற்சிகளை பற்றி இங்கே காணலாம்
நீச்சல் யூரிக் அமில அளவை இயல்பாக்க உதவுகிறது. நீச்சல் உடலில் அதிக கலோரிகளை எரிக்கிறது, இதன் காரணமாக உங்கள் அதிகரித்த எடையையும் கட்டுப்படுத்தலாம்.
யூரிக் அமிலம் உள்ளவர்களுக்கும் சைக்கிள் ஓட்டுவது பரிந்துரைக்கப்படுகிறது. தினமும் சிறிது நேரம் அல்லது 30 நிமிடம் சைக்கிள் ஓட்டுபவர்களின் யூரிக் அமிலம் கட்டுக்குள் வரத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
தினமும் சிறிது நேரம் நடப்பது உங்கள் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், இதய நோய்களின் அபாயத்தையும் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் உடல் பருமனையும் குறைக்கலாம்.
உடலில் யூரிக் அமிலம் அதிகமானால், கடல் உணவு, ஆல்கஹால், சிவப்பு இறைச்சி, ஐஸ்கிரீம், சோடா, துரித உணவு மற்றும் விலங்கு கல்லீரல் ஆகியவற்றை உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இவை உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும்.