ஆசிய விளையாட்டு போட்டியில் மனு பேக்கர் இன்று (செப். 27) தங்கப்பதக்கம் வென்றார்.
மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச்சூடு போட்டியில் இவர் தங்கம் வென்றார்.
இவர் ஹரியானாவின் ஜஜ்ஜர் மாவட்டத்தில் 2002ஆம் ஆண்டு பிப். 18ஆம் தேதி பிறந்தவர்.
இவர் அவரின் 14ஆவது வயதில் இருந்தே துப்பாக்கிச்சுடுதலின் தரவரிசையில் நல்ல வளர்ச்சியை கண்டார்.
2018ஆம் ஆண்டு ISSF உலகக் கோப்பையில் தங்கம் வென்றதன் மூலம், அந்த பதக்கத்தை வென்ற இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
டோக்கிய ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 4ஆவது இடம்பிடித்து பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டார்.
இவருக்கு 2020ஆம் ஆண்டில் அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
அவரின் நிகர சொத்து மதிப்பு தற்போது ரூ.13 கோடி என கூறப்படுகிறது.