தற்போது ஆண்கள் பலருக்கு குழந்தைப் பேறு உண்டாகுவதில் சிக்கல் வருகிறது. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று விந்தணு எண்ணிக்கை குறைவு.
விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடிய சில உணவுகளை சாப்பிடுவதால், ஆண்கள் பாலியல் தொடர்பான உடல் நல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
வாழைப்பழத்தில் உள்ள ப்ரோம்லைன் என்னும் அரிய நொதி விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதன் செயல்பாட்டையும் அதிகரிக்க உதவுகிறது.
பூண்டில் காணப்படும் நொதியான அலிசின் மற்றும் செலினியம் விந்துணு இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.
கீரையில் இருக்கும் ஃபோலிக் அமிலம் விந்தணுக்களின் வளர்ச்சிக்கு அவசியமானது. விந்தணுக்கள் வீரியத்தையும் ஊக்குவிக்க செய்கிறது.
பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் விந்தணுக்களை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது. விந்தணுகள் வீரியமாக கருமுட்டையை அடைவதற்கு வலுவை கொடுக்கிறது.
தரமான விந்தணுக்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படுகின்றன. எனவே இந்த சத்துக்களைப் பெற, சால்மன், நெத்திலி உள்ளிட்ட பல வகையான கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொள்ளலாம்.
பூசணி விதைகளில் அதிக அளவு துத்தநாகம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இவை இரண்டும் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தி, கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கிறது.