பாதாம் மிகவும் சத்தான உணவு. பாதாம் சாப்பிடுவது மூளையை கூர்மையாக்குகிறது. இது திசுக்களை வலுவாக வைத்திருக்கும். சருமத்தை இளமையாக வைத்திருக்கிறது.
பாதாம் பருப்பை சரியான அளவில், சரியான முறையில் உட்கொள்வதால், உடல் எடையை குறைப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன.
பாதாம் ஆரோக்கியமானது என்றாலும் இதனை அப்படியே சாப்பிடுவதால், முழுமையான பலன்கள் கிடைக்காது. ஆனால், இதனை ஊறவைப்பதன் மூலம் அவற்றில் இருந்து அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்ச முடியும்.
பாதாம் பருப்பு வைட்டமின் ஈ, துத்தநாகம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரமாகும்.
ஆயுர்வேதத்தில், பாதாம் ஊறவைத்து தோலை நீக்கிய பின் பாதாம் சாப்பிட வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதாமில் மறைந்திருக்கும் அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.
பாதாம் சாப்பிடுவதற்கு சிறந்த வழி வெதுவெதுப்பான நீரில், இரவு முழுவதும் ஊறவைத்து அவற்றை உரித்து காலையில் சாப்பிடுவது. ஒரு நாளில் நீங்கள் சுமார் 10 பாதாம் சாப்பிடலாம்.
பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஊறவைத்த பாதாம் எடை இழப்புக்கும் உதவுகிறது. இது தவிர, வைட்டமின் பி7 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை ஊற வைத்த பாதாமில் காணப்படுகின்றன
பாதாம் பருப்பை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடுவது பித்தத்தை அதிகரிக்கிறது. செரிமான பிரச்சனையையும் ஏற்படுத்துகிறது,
பாதாமின் தோலில் டானின்கள் உள்ளன, அவை ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன. பாதாம் பருப்பை ஊறவைத்தால், தோலை எளிதில் எடுத்து விடலாம்.