ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு பிளேயர்கள் அதிகம் வேண்டாம் - அஸ்வின்
ஐபிஎல் போட்டியில் அதிகம் வெளிநாட்டு பிளேயர்கள் வேண்டாம் என அஸ்வின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கொடுத்துள்ள விளக்கத்தில்...
ஐபிஎல் விளையாடும்போது வெளிநாட்டு பிளேயர்கள் இந்திய பிட்ச் பற்றி நன்றாக தெரிந்துக்கொள்கிறார்கள்.
இது இந்திய கிரிக்கெட்டிற்கு தான் ஆபத்து. ஆகையால் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்
ஆகையால் நிச்சயம் ஒரு அணிக்கு நான்கு வெளிநாட்டு வீரர்கள் தான் இருக்க வேண்டும் என்ற விதியை கொண்டு வர வேண்டும்.
மேலும் பயிற்சியாளர்கள் தங்களுக்கு வேண்டிய வீரர்களை அணிக்கு கொண்டு வரக்கூடாது என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சென்னை அணியின் பயிற்சியாளர், நியூசிலாந்தை சேர்ந்த ப்ளமிங். இவர் நான்கு நியூசிலாந்து வீரர்களை அணியில் கொண்டுவந்துவிட்டார்.
இதேபோல் மும்பை அணி பயிற்சியாளர் ஜெயவர்த்தன் இலங்கை வீரர்களை அணியில் கொண்டு வர ஆர்வம் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.