உங்களை ஒட்டுக்கேட்கும் ஸ்மார்ட்போன்..! தவிர்ப்பது எப்படி?
ஸ்மார்ட்போன்கள் என்பது இன்றைய காலத்தில் நாம் விலை கொடுத்து வாங்கும் உளவுக் கருவி
நம்மை பற்றி கார்பரேட்களுக்கு அனைத்து தகவல்களையும் நாமே தெரிவிக்கும் சாதனம் தான் இந்த ஸ்மார்ட்போன்
கொஞ்சம் வியப்பாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.. எப்படி என கேட்கிறீர்களா?
புதிதாக மொபைல் வாங்கி வரும் நாம், நமக்கு தேவையான app-களை பதிவிறக்கம் செய்வோம்.
பிறகு இன்ஸ்டால் செய்யும்போது அந்த செயலிகள் சில அனுமதிகளை கேட்கும். என்றாவது அதனை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?
அழைப்புகள் மேற்கொள்ள அல்லது ரெக்கார்டு செய்ய, மெசேஜ்களை படித்துக் கொள்ள, வீடியோ மற்றும் ஆடியோக்களை ரெக்கார்டு செய்ய போன்ற அனுமதிகளையும் கேட்கும்.
கண்ணை மூடிக் கொண்டு எல்லாவற்றுக்கும் அனுமதி கொடுப்பவர்கள் தான் பலர் இருக்கிறார்கள். கேமரா, ஆடியோகளை ரெக்கார்டு செய்ய தேவையில்லாத இந்த செயலிகளுக்கும் நாம் இந்த அனுமதியை கொடுத்திருப்போம்.
அவற்றின் ஊடாக தான் அந்தந்த கார்ப்ரேட் நிறுவனங்கள் உங்களை கண்காணிக்கின்றன. உங்களின் ரசனையை தெரிந்து கொள்கின்றன.
இதன்பிறகு நீங்கள் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் நீங்கள் பேசியது தொடர்பான விளம்பரங்கள் வரும்.
இது ஆபத்தானதும் கூட என்பதால் உடனடியாக செயலிகளுக்கு கொடுத்திருக்கும் அனுமதியை மறுபரிசீலனை செய்து கொள்ளுங்கள்