பணிஒய்வு காலத்தில் நிலையான வருமானத்தை பெற நாம் ஒரு சில திட்டங்களை மட்டும் நம்பி இருக்காமல் பல வழிகளில் ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
பணி ஓய்வுக்குப் பின் நிலையான வருமானத்தைப் பெறுவதற்கான ஏழு உத்திகள் இங்கே கொடுக்கப்படுள்ளன.
இது ஒரு காப்பீட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தமாகும். இதில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி அதற்கு ஈடாக, வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான வருமானம் பெறலாம்.
மிகவும் பாதுகாப்பான எஃப்டி -இலிருந்து பெறப்படும் வட்டி, பணி ஓய்வுக்குப் பிறகும் பிரபலமான வருமான ஆதாரமாக உள்ளது.
வீடு அல்லது குத்தகை நிலத்திலிருந்து பெறப்படும் வாடகைகள் பணி ஓய்வுக்கு பிறகு நல்ல வருமானத்தை அளிக்கும்.
இதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டை கடனுக்கான பாதுகாப்பாகப் பயன்படுத்தி கடன் வாங்கலாம். இது கூடுதல் வருமான ஆதாரத்தை வழங்குகிறது.
ஒரு முறையான SWP மூலம், ஒருவர் ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து தொடர்ந்து பெறலாம்.
அரசாங்கத்தின் அஞ்சல் துறையால் ஐந்தாண்டு முதிர்வு திட்டம் நடத்தப்படுகிறது. சமீபத்திய விதிகளின்படி, இந்தத் திட்டத்தில் ஒரு தனிநபர் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சத்தை முதலீடு செய்யலாம்.
இவை தவிர, முதியவர்கள் பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் பிற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
இந்தத் தகவல் கற்றல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதுன. முதலீட்டு முடிவை எடுப்பதற்கு முன் தொழில்முறை ஆலோசகரை அணுகவும்