ரியல் எஸ்டேட் அதாவது, வீடு, மனை ஆகியவற்றில் மக்கள் பெரிய அளவில் முதலீடு செய்கிறார்கள்.
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் முன் நாம் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சில தவறுகளால் உங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படலாம்.
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் முன் பட்ஜெட் போட்டு செயல்படுவது நல்லது. வீடு/மனை வாங்கும் முன் அதற்காக உங்களால் எவ்வளவு செலவிட முடியும் என்பதை புரிந்துகொள்ளவும்,
முதலீடு செய்ய உங்களிடம் தொகை போதவில்லை என்றால் கடன் வாங்கலாம்.
கடன் வாங்கும் போது பல்வேறு வட்டி விகிதங்களை ஒப்பிட்ட பிறகே வங்கியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
வரி விலக்கு பற்றிய முழு விவரங்களையும் கடன் வாங்கும் முன்னரே புரிந்துகொள்வது நல்லது.
ரியல் எஸ்டேட் மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து பிராஜெக்டுகளையும் நன்றாக ஆராய்ந்து பின் எதை வாங்குவது என்று முடிவெடுப்பது நல்லது,
தவறான இடத்தில் முதலீடு செய்து வீடு / நிலம் வாங்குவது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தலாம்.