மூளையில் கட்டி என்பது எந்த வயதிலும் ஏற்படக்கூடியது.
மூளையில் அசாதாரண முறையில் செல்கள் வளரத் தொடங்கும் போது, மூளையில் கட்டி ஏற்படுகிறது.
அடிக்கடி கடுமையாக தலைவலி ஏற்பட்டால், மருத்துவரிடம் சென்று உடனே பரிசோதித்து கொள்ளவும்.
மங்கலான பார்வை, மூளையில் கட்டிகளை இருப்பதை உணர்த்தும் சில ஆபத்தான அறிகுறிகளில் ஒன்று.
அடிக்கடி குமட்டல் அல்லது வாந்தி ஏற்பட்டால், அது மூளையில் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
பேசுதல் அல்லது புரிந்து கொள்ளுதலில், சிரமம் ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளவும்.
பலவீனம் அல்லது உடலில் ஒரு பாகத்தில் உணர்வின்மை இருந்தால் அது மூளை இல் கட்டி இருப்பதை உணர்த்தும் அறிகுறி.
அடிக்கடி மயக்கம் ஏற்பட்டால், உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.