இணையவழிச் சேவையின் மூலமாக நில அளவைக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு பட்டா சிட்டாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான 'தமிழ்நிலம்' தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மைத் துறையின் அதிகாரத்தின் கீழ் வரும், சென்னை, சேப்பாக்கம், சர்வே மற்றும் தீர்வு ஆணையரால் இந்த போர்டல் நிர்வகிக்கப்படும்.
நிலம் தொடர்பான தகவல்களை பரிமாற்றம் மற்றும் விசாரணை விவரங்களை அணுகுவதை எளிமைப்படுத்தும் வகையில் தமிழ்நிலம் இணையதளத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த இணையதளம் தங்கள் நில விவரங்கள் அல்லது தேவையான சொத்து விவரங்கள் தொடர்பான பரிமாற்றம் மற்றும் விண்ணப்ப நிலையை அறிய உதவும்.
நிலங்களை அளவீடு செய்ய இனி தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் செல்ல தேவையில்லை. எந்நேரத்திலும் எங்கு இருந்தும் நில அளவை செய்ய https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கலாம்
நில உரிமையாளர்கள் நிலத்தை விற்பனை செய்ய, நிலத்தை மனைகளாக பிரித்து விற்க அல்லது வீட்டு மனைகளை விற்க, நிலத்தை அளக்க வேண்டியது அவசியம் ஆகும்.
வீடு, நிலம் அல்லது வீட்டு மனை வாங்கும் போது நில அளவையரை வைத்து நிலத்தை அளக்க வேண்டும். இப்படி அடிக்கடி நில அளவைத் துறையை மக்கள் நாட வேண்டியிருப்பதால், தமிழ்நிலம் இணையதள சேவைக்கு நல்ல வரவேற்பு உள்ளது