காலையில் செய்யும் வாக்கிங் (Walking) பல நன்மைகளைக் கொண்டுள்ளது. காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வதன் முக்கிய நன்மைகளை பற்றி இங்கே காணலாம்.
காலை உணவுக்கு முன் நடப்பது நமது செரிமான அமைப்பைத் தூண்டி, நாள் முழுவதும் செரிமானத்தை சிறப்பாக இருக்கச்செய்கிறது. இது ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
காலையில் வெறும் வயிற்றில் நடப்பது இதயத்திற்கு உதவும். இது கொழுப்பைக் குறைக்கும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
வெறும் வயிற்றில் நடப்பது நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க (Fat Burn) உதவுகிறது. இது ஆற்றலை எரிபொருளாக சேமிக்கிறது.
வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செல்வதன் மூலம் உங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம். நீரிழிவு அல்லது ப்ரீடியாபயாட்டீஸ் உள்ளவர்கள் இந்தப் பயிற்சியின் மூலம் பெரிதும் பயனடையலாம்.
காலையில் வெறும் வயிற்றில் வாகிங் செய்வது நாள் முழுவதும் இனிமையான மற்றும் புத்துணர்ச்சியுடன் கூடிய மனநிலையுடன் இருக்க உதவும்.
காலை நடைப்பயிற்சி செய்வதன் மூலம் பசியையும் எடையையும் (Weight Loss) கட்டுப்படுத்தலாம். இதனால் வளர்சிதை மாற்றம் சீராகி கலோரி அளவு குறைகிறது.