பணம் என்பது நமது வாழ்வின் இன்றியமையாத ஒரு அம்சம். பணம் கொண்டே பணம் சம்பாதிப்பது ஒரு கலை. பணத்தை பல மடங்காக பெருக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.
இதற்கு பாதுகாப்பான முதலீடு, ரிஸ்க் எடுக்கும் தன்மை, சரியான நேரம் என பல காரணிகள் ஒத்துழைக்க வேண்டும்.
உங்களிடம் உள்ள பணத்தை எளிதில் இரட்டிப்பாக்கும் 5 எளிய வழிகள் பற்றி இங்கே காணலாம்.
மியூசுவல் ஃபண்ட் பணத்தை இரட்டிப்பாக்க பாதுகாப்பான மற்றும் வேகமான வழியாக கருதப்படுகின்றது.
நிதி ஆலோசகரின் பரிந்துரை, சிறிய அளவிலான ரிஸ்க், திட்டமிடல் ஆகியவற்றுடன் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்.
நல்ல வட்டி விகிதங்களை அளிப்பதால் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டும் பணத்தை இரட்டிப்பாக்க சிறந்த வழி
தேசிய சேமிப்பு சான்றிதழின் (National Saving Certificate) காம்பவுண்டிங் முறை மூலம் எளிதாக பணத்தை பெருக்கலாம்.
ரியல் எஸ்டேட்டில் செய்யப்படும் முதலீடு நிலையான வருமானத்தையும், லாபம் காண்பதற்கான வழியையும் அளிக்கும்.
இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சில முதலீடுகள் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை. இவற்றில் முதலீடு செய்யும் முன் உங்கள் நிதி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்க பரிந்துரைக்கப்படுகின்றது.