பைல்ஸ் எனப்படும் மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் ஏற்படும் ஒரு நோயாகும்.
பைல்ஸ் அல்லது மூல நோய் இருந்தால் ஆசன வாயில் கடுமையான வலி, மலம் கழிக்கும் போது இரத்த கசிவு, ஆசன வாயில் கடுமையான எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவை ஏற்படும்.
மூல நோய் இருந்தால், அதனை உடனே கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், நோய் முற்றி நாள்பட்ட இரத்த கசிவு காரணமாக திசுக்களின் இறப்பு மற்றும் ஆசன வாய் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
பைல்ஸ் பிரச்சனைக்கு சிறந்த சிகிச்சை ஐஸ் ஒத்தடம். இதனால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும். ஐஸ் கட்டிகளை துணியில் போட்டு கட்டி, 10 நிமிடம் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
எலுமிச்சை சாற்றில் காட்டனை நனைத்து, மெதுவாக ஆசனவாயில் தடவ, ஆரம்பத்தில் எரிச்சல் இருந்தாலும், உடனடி நிவாரணம் கிடைக்கும். சூடான பாலில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து தடவுவதும் பலன் அளிக்கும்.
பாதாம் எண்ணெய் பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யும் என்பதால், காட்டனை பாதாம் எண்ணெயில் நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர, வலி, அரிப்பு மற்றும் எரிச்சல் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
ஆலிவ் ஆயிலில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், திசுக்களை சரிசெய்து, அதன் இயக்கத்தை அதிகரிக்கும்.
ஆலுவேரா என்னும் கற்றாழை ஜெல்லை ஆசனவாயில் தடவி மெதுவாக மசாஜ் செய்து வந்தால், எரிச்சல் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
முக்கியமாக பைல்ஸ் உள்ளவர்கள், தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும். உடலில் போதிய அளவில் தண்ணீர் இருந்தால் தான், அவை குடலியக்கத்தில் பிரச்சனையை ஏற்படுத்தாமல், மலம் எளிதாக வெளியேற உதவி புரியும்.
ஆப்பிளை உட்கொள்வதன் மூலம் மூல நோயை கட்டுப்படுத்தலாம். இதனால் செரிமானம் சிறப்பாக இருக்கும். ஆப்பிளில் பெக்டின் ஃபைபர் உள்ளது. இது குடலை சீராயாக வைத்து மலத்தை தளர்த்த உதவுகிறது.
பழுத்த பப்பாளி சாப்பிடுவதால், மூல நோயினால் ஏற்படும் இரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. பப்பாளியில் காணப்படும் நார்ச்சத்து காரணமாக, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
வாழைப் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றுடன் பொட்டாசியம் உள்ளது, இது மூல நோய் தீவிரமடைவதை தடுக்கிறது.