நாள்பட உபயோகிக்கும் நோக்கில் நாம் பல பொருள்களை ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கிறோம். ஆனால், எந்தப் பொருள்களை வைக்க வேண்டும், எந்த எந்த பொருட்களை வைக்கக் கூடாது என்பது பெரும்பாலானோருக்கு தெரிவிதில்லை. பிரிட்ஜில் வைக்கவே வைக்கக் கூடாத பழங்கள், காய்கறிகள், உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
கத்திரிக்காய் வெப்பநிலை உணர்திறன் கொண்ட காய்கறிகள் ஆகும். 10 ° C க்கும் குறைவான வெப்பநிலை கத்தரிக்காயின் அமைப்பையும், சுவையையும் கெடுத்து விடும். அவை அறை வெப்பநிலையில் தான் சேமிக்கப்பட வேண்டும்.
சாதாரண தட்பவெப்பநிலையில் இறுக மூடி வைத்தாலே தேன் அதன் சத்துக்களை பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடியது. ஆனால், ஃபிரிட்ஜில் வைத்தால், மணல்போலக் கடினமாகவும், சுவை மாறியும் போய்விடும். ஏறக்குறைய உபயோகிக்க முடியாத அளவுக்கு தேன் மாறிவிடும்.
காபி தூள் அல்லது காபி கொட்டை இவற்றை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை. காற்று புகாத பாட்டிலில் வைத்திருந்தாலே போதுமானது. ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் ஈரப்பதம் காபித் தூளை பாதித்து, கெட்டுப்போகச் செய்துவிடும்.
பூண்டைதிறந்தவெளியில் வைத்திருப்பதே நல்லது. ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டால், பூண்டின் சுவை கெட்டு, அதன் நீண்டகால பலனும் பாதிக்கப்படும்.
பிரெட் போன்ற பேக்கரி பொருள்களை பிரிட்ஜில் வைத்தால், அதிகமான குளிரில் விறைத்துப் போய்விடும். இதனால் சுவையும் கெட்டு, உலர்ந்து விடும். சாதாரண தட்பவெப்பத்தில் தான் சுவையும் மெருது தன்மையும் இருக்கும்.
முட்டையை பிரிட்ஜில் வைப்பது முற்றிலும் தவறு. ஏனேன்றால் முட்டையின் மேல் பாக்டேரியாக்கள் இருக்ககூடும். இவற்றை பிரிட்ஜில் வைப்பதன் மூலாம் பாக்டேரியாக்கள் வாழ்வதற்க்கான சூழலை நாமே உருவாக்கி கொடுப்பது போல் ஆகிவிடும்.
பீனட் பட்டர் அறை வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும். குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தால் அது உலர்ந்து கெட்டியாகி விடும். கிரீமியாக, சுலபமாக தடவக்கூடிய பீனட் பட்டருக்கு, அதை இருண்ட, உலர்ந்த இடத்தில் சேமித்து வைப்பது நல்லது.
துளசி , ரோஸ்மெரி அல்லது மற்ற எந்த மூலிகை இலைகளையும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. பிரிட்ஜில் வைப்பதால், மருத்துவகுணம் போய் , பயன்படுத்தினாலும், உபயோகம் இல்லாததாக மாறிவிடும். தேவைப்பட்டால் துணியில் சுற்றி ஒரு டப்பாவில் வைக்கலாம்.
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களும் ஃபிரிட்ஜில் வைக்க கூடாது. அதிகக் குளிரான சூழல், இந்தப் பழங்களின் சிட்ரஸ் அமிலத்தை பாதித்து, சுவையை மாற்றிவிடும்.
அவகேடோ பழத்தையும் ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது. கடைகளில் வாங்கும்போது பழுக்காத நிலையில் இருக்கும் இந்தப் பழம், ஃபிரிட்ஜில் வைத்தால், பழுக்கவே பழுக்காது. மேலும், அதன் சுவையும் மாறிவிடக்கூடும்.
அதிகக் குளிர் தக்காளியின் பளபளப்பையும் சுவையும் பாதிக்கக்கூடியது. காற்றுப்புகக்கூடிய சாதாரணச் சூழலிலேயே தக்காளி சில நாள் வரை கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைக்கும் தக்காளி பழுக்காததோடும் அதன் சுவையும் கெட்டு விடும்.
உருளைக்கிழங்கு காய்ந்து இருப்பதே நல்லது. இது, ஈரத்தில் முளைத்துவிடும் தன்மை கொண்டது. சாதாரணச் சூழலில் பேப்பர் பைகளில் சுற்றிவைப்பது சிறந்தது. பிளாஸ்டிக் பைகளில் சுற்றிவைத்தால், உருளைக்கிழங்கின் ஈரப்பதத்தால் சீக்கிரமே கெட்டுவிடும் ஆபத்து உண்டு.
இனிப்பு, புளிப்பு மற்றும் காரச் சுவைகளில் வரும் இந்த வகை கெட்ச்சப்-ஐ ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஒரு மாதம் வரை சாதாரணச் சூழலிலேயே கெடாமல் இருக்கக் கூடியது கெட்ச்சப். ஃபிரிட்ஜில் வைத்தால், இறுகிவிடும்.