விவோவின் புதிய ஸ்மார்ட்போன் சைவ தோல் கொண்டதாக இருக்கும், ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இது தொடர்பான செயலி விவரங்கள் ஆகஸ்ட் 21-ஆம் தேதியும், கேமரா விவரங்கள் ஆகஸ்ட் 23-ஆம் தேதியும், பேட்டரி விவரங்கள் ஆகஸ்ட் 26-ஆம் தேதியும் வெளியிடப்படும் என விவோ தெரிவித்துள்ளது
3 பின்புற கேமரா அமைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Vivo T3 Pro 5G ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் சோனி IMX882 முதன்மை கேமராவைக் கொண்டிருக்கலாம்.
ஃபோனில் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 SoC பொருத்தப்பட்டிருக்கும். AnTuTu பெஞ்ச்மார்க்கில் 824,000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளது.
விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன், 7.4 மிமீ தடிமன் கொண்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது, இது அதன் பிரிவில் உள்ள மெல்லிய தொலைபேசிகளில் ஒன்றாக இருக்கும்
புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுக்காக, Vivo T3 Pro 5G போனில், சோனி IMX882 இன் 50MP + 8MP + 2MP டிரிபிள் கேமரா பின்புற பேனலில் இருக்கும்.
8 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்தைக் கொண்ட இந்த கைபேசி இந்தியாவில் ரூ.25,000 வரை விற்கப்படலாம்.
Vivo T3 Pro போனானது, iQOO Z9s ப்ரோ போனின் மறு அவதாரமாக இருக்கலாம், ஆகஸ்ட் 21ம் தேதியறு இந்த விவரம் தெரிந்துவிடும்