ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை போன் வேகமாக இயங்காமல், ஹாங்க் ஆவது.
புதிய ஆண்ட்ராய்ட் போனை வாங்கி சில நாட்களில் மெதுவாக செயல்படுவதை பலர் அனுபவித்து இருப்பார்கள்
போன் ஹாங்க் ஆகாமல் வேகமாக செயல்பட, தேவையில்லாத செயலிகளை முதலில் நீக்க வேண்டும்.
போனின் இடத்தை அடைத்துக்கொள்ளும் தேவையில்லாத போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றை நீக்க வேண்டும்.
தேவை என்றால், போனில் உள்ள போட்டோக்கள், வீடியோக்கள், பிற கோப்புகளை உங்களிடம் உள்ள ஹார்ட்டிஸ்குகள் அல்லது எஸ்டி கார்டுகளில் மாற்றிக் கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் போனில் பேக்கிரவுண்டில் பல்வேறு செயலிகள் திறந்திருப்பதும், போனின் செயல்திறனை பாதிக்கும். அதனை அவ்வபோது பார்த்து குளோஸ் செய்ய வேண்டும்.
உங்கள் போனின் சாஃப்ட்வேரை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும்.
போனில் லைவ் வால்பேப்பர் வைத்திருப்பது நல்ல தோற்றத்தை கொடுக்கும் என்றாலும், இது போனின் செயல் திறனை பாதிக்கும்