இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகமானால் அது மூட்டு வலி, சிறுநீரக கற்கள் போன்ற பல வித பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி மூட்டு வலியை சரி செய்ய உதவும் ஐந்து மூலிகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த ஐந்து மூலிகைகளையும் அரைத்து சூரணம் தயார் செய்து அதை, காலையில் வெறும் வயிற்றிலும் இரவு தூங்கும் முன்னரும் உட்கொள்ள வேண்டும்.
இதற்கு நான்கு பூண்டு பற்கள், ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயம், ஒரு இஞ்ச் இஞ்சி, இரண்டு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி ஓமம் ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த சூரணத்தை இன்னும் அதிக அளவில் தயாரிக்க, பொருட்களை இதே விகிதங்களில் இன்னும் அதிகமான அளவுகளில் சேர்த்து அரைக்கவும்.
இந்தச் சூரணம் சிறுநீரகத்தை பாதுகாப்பதுடன் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவி செய்யும்.
வெதுவெதுப்பான நீருடன் இதை உட்கொண்டால் இதன் ஆற்றல் அதிகரிக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.