ஹேர் டிரையரை வைத்து தண்ணீரில் விழுந்த போனை சுத்தம் செய்யலாமா?
இப்போது அறிமுகமாகும் அதிநவீன ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவருகின்றன.
இருப்பினும் உங்களது ஸ்மார்ட்போன் தவறி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
முதலில் உங்களது ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் வெளியே எடுத்து அதை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும்.
ஆனால் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்த உடன் தானாக ஆப் ஆகிவிடும். ஒருவேளை அப்படி ஆப் ஆகவில்லை என்றால், போனை வெளியே எடுத்த உடன் சுவிட்ச் ஆப் செய்துவிடுவது நல்லது.
சுவிட்ச் ஆப் செய்ய காரணம் என்னவென்றால், போனின் உள்ளே இருக்கும் சிறிய சிறிய சாதனங்கள் ஷார்ட் ஆகமால் இருக்கும். அதேபோல் ஸ்மார்ட்போனில் இருக்கும் சிம் கார்டை கூட வெளியே எடுக்க வேண்டும்.
சிம் கார்டை வெளியே எடுத்த பின்பு போனில் இருக்கும் காட்டன் துணி அல்லது அதிக நீரை உறிஞ்சும் துணி கொண்டு துடைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலர் போனில் இருக்கும் நீரை எடுக்க ஹேர் டிரையரை பயன்படுத்தச் சொல்வார்கள். ஆனால் தப்பி தவறிக் கூட அந்த ஹேர் டிரையரை பயன்படுத்தக் கூடாது.
அதாவது ஹேர் டிரையரில் இருந்து வரும் காற்று மிகவும் சூடாக இருக்கும். எனவே இந்த சூடான காற்று ஸ்மார்ட்போனின் உள்ளே இருக்கும் சிறு மின் இணைப்புகளை அதிகமாகச் சேதப்படுத்திவிடும்.
நீங்கள் தண்ணீரில் விழுந்த ஸ்மார்ட்போனை உடனே சார்ஜ் செய்தால் போன் முற்றிலும் பாதிப்படைய அதிக வாய்ப்பு உள்ளது.
சிலர் போன் தண்ணீரில் விழுந்தவுடன் அரிசி மூட்டையில் போட சொல்வார்கள். ஆனால் மொபைலை அரிசியில் போட்டால் அது நீரை எடுக்காது.
தண்ணீரில் விழுந்தவுடன் ஒருபோதும் சூரிய ஒளியில் வைக்கக்கூடாது. பின்பு எந்த சூடான பொருளையும் மொபைல் பக்கத்தில் வைக்க வேண்டாம்.
குறிப்பாக வெயில் படாத இடத்தில் போனை வையுங்கள். அதன்பின்பு போனை எடுத்து ஆன் செய்து பாருங்கள். ஒருவேளை உங்களது போனில் அதிக தண்ணீர் போகவில்லை என்றால் ஆன் செய்த பின்னர் வழக்கம் போல் அது ஒர்க் ஆகும்
போன் ஆன் ஆகவில்லை என்றால், உடனே சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லவும்.