உடல் பருமன் காரணமாக, எந்த நோய்களுக்கான ஆபத்து அதிகரிக்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
உடல் எடை பல இதய நோய்களுக்கான காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. BMI அதிகரிக்கும் போது, கரோனரி இதய நோய், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயங்கள் அதிகரிக்கின்றன.
உடல் பருமன் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய்க்கான ஆபத்து அதிகம். டைப் 2 நீரிழிவு நோயாளிகளில் 80 சதவீதம் பேர் உடல் பருமன் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் இரத்த அழுத்தமும் அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
உடல் பருமன் அதிகமாக இருந்தால் சிறுநீரகங்களால் ரத்தத்தைச் சரியாகச் சுத்திகரிக்க முடியாமல், சிறுநீரகச் செயலிழப்புக்கான அபாயம் அதிகரிக்கும்.
உடல் பருமன் ஆஸ்துமா அபாயத்தையும் அதிகரிக்கும். மார்பு மற்றும் வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் எடை காரணமாக, நுரையீரல் சுருக்கப்பட்டும்.
அதிக எடையுடன் இருப்பது நினைவாற்றல் மற்றும் மனநிலை வரை அனைத்தையும் பாதிக்கிறது.
சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை பின்பற்றி எடையை குறைத்தால் இவற்றை தவிர்க்கலாம்.