பெட்ரோல் பங்குகள் அதிக லாபம் ஈட்டுவதற்காக சில மோசடி செயல்களில் ஈடுபடுகின்றன.
உங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் போது நீங்களும் மோசடிக்கு பலியாகலாம்.
பெட்ரோல் பங்குகளில் சில விஷயங்களை எப்போதும் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.
பெட்ரோல் நிரப்பும் முன்பு, மீட்டர் ZERO-ல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். அப்படி இல்லை என்றால் ZERO செய்யச் சொல்லுங்கள்.
பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும் போது மீட்டரைக் கண்காணித்து சரியான அளவு பெட்ரோல் இருப்பதாய் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பெட்ரோல் நிரப்பிய பிறகு, எப்போதும் பில் கேட்டு வாங்குங்கள். ஒருவேளை மோசடி நடந்தால் இதில் கண்டுபிடித்து விடலாம்.
பெட்ரோலின் தரத்தில் கவனம் செலுத்துங்கள். பெட்ரோலில் தண்ணீர் அல்லது கலப்படம் இருந்தால் உங்கள் வாகனத்தை சேதப்படுத்தும்.
நம்பகமான உங்களுக்கு நன்கு தெரிந்த பங்குகளில் எப்போதும் பெட்ரோலை நிரப்புவது நல்லது.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக பெட்ரோல் பங்க் ஊழியர் அல்லது அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்.