பாஜகவில் இணைந்த 10 காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர்கள் யார் யார்?

S.Karthikeyan
Feb 18,2024
';


2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த 10 முன்னாள் முதலமைச்சர்கள் பட்டியலை பார்க்கலாம்.

';

1. கிரண் குமார் ரெட்டி

ஆந்திரப் பிரதே முன்னாள் முதமைச்சர் கிரண் குமார் ரெட்டி. காங்கிரஸிலிருந்து விலகிய அவர், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாஜகவில் சேர்ந்தார். பிரிக்கப்படாத ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தார். மாநில பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

';

2. கேப்டன் அமரீந்தர் சிங்

காங்கிரஸ் கட்சியில் இருந்த அமரீந்தர் சிங் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். நவ்ஜோத் சிங் உடன் ஏற்பட்ட மோதலையடுத்து, உட்கட்சி குழப்பத்தால் காங்கிரஸில் இருந்து விலகி 2022 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

';

3. எஸ்.எம்.கிருஷ்ணா

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா. 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தன்னை பாஜகவில் சேர்த்துக் கொண்டார். அவர் அக்டோபர் 1999 முதல் மே 2004 வரை கர்நாடக முதலமைச்சராக இருந்தார். டிசம்பர் 2004 முதல் மார்ச் 2008 வரை மகாராஷ்டிர ஆளுநராகவும் இருந்தார்.

';

4. திகம்பர் காமத்

கோவாவின் முன்னாள் முதல்வரான திகம்பர் காமத், 2022ல் மீண்டும் பாஜகவில் இணைந்தார். 1994ல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 2005-ல் மீண்டும் காங்கிரஸில் இணைந்த அவர், காமத் 2007 முதல் 2012 வரை முதலமைச்சராக பதவி வகித்தார்.

';

5. விஜய் பகுகுணா

உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணா, 2016 ஆம் ஆண்டு அம்மாநிலத்தைச் சேர்ந்த எட்டு முன்னாள் எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். பகுகுணா மார்ச் 2012 முதல் ஜனவரி 2014 வரை உத்தரகாண்ட் முதலமைச்சராக இருந்தார்.

';

6. பேமா காண்டு

பெமா காண்டு 2016 டிசம்பரில், அருணாச்சல மக்கள் கட்சியின் (பிபிஏ) 32 எம்எல்ஏக்களுடன் சேர்ந்து பாஜகவில் சேர்ந்தார். இவர் தலைமையிலான அரசாங்கம் 2016 ஜூலை முதல் ஆட்சியில் உள்ளது.

';

7. அசோக் சவான்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் எஸ்.பி.சவானின் மகனும், காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது முதலமைச்சராகவும் இருந்த அசோக் சவான் அண்மையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

';

8. நாராயண் தத் திவாரி

உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் நாராயண் தத் திவாரி, தனது மகன் ரோஹித் சேகருடன் ஜனவரி 2017ல் பாஜகவில் இணைந்தார். திவாரி 2002 முதல் 2007 வரை உத்தரகாண்டின் மூன்றாவது முதல்வராகவும், 1976 மற்றும் 1989-க்கு இடையில் மூன்று முறை உத்தரபிரதேச முதல்வராகவும் இருந்தார்.

';

9. ரவி நாயக்

கோவாவின் முன்னாள் முதல்வர் ரவி நாயக் 2021 ஆம் ஆண்டு அவரது இரண்டு மகன்களுடன் பாஜகவில் சேர்ந்தார்.

';

10. குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத் 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் அவர், அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ளவில்லை.

';

VIEW ALL

Read Next Story