இந்தியாவில் OnePlus Nord 4, Pad 2 ஆகியவற்றின் விற்பனை தொடங்கவிருக்கிறது. எங்கு வாங்கினால் எவ்வளவு விலை? விவரங்களைத் தெரிந்துக் கொள்வோம்
மெலிதான 7.99mm மெட்டல் யூனிபாடி, 100W SUPERVOOC சார்ஜிங் கொண்ட 5,500mAh பேட்டரி மற்றும் Snapdragon 7+ Gen 3 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 4 முக்கிய ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள், 6 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளை வழங்குகிறது.
தொலைபேசியில் 6.74 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் சோனி பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
8+128ஜிபி: ரூபாய் 29,999 என்றால், 8+256ஜிபி 32,999 ரூபாய்க்கும், 12+256ஜிபி 35,999 ரூபாய்க்கும் கிடைக்கும்
6.49mm தடிமன், 584g எடை மற்றும் 12.1-inch 3K டிஸ்ப்ளே கொண்டுள்ள ஒன்பிளஸ் பேட் 2வில், 67W SUPERVOOC ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 9,510mAh பேட்டரி, 8MP முன் கேமரா மற்றும் 13MP பின்புற கேமரா ஆகியவை உள்ளன
8+128ஜிபி கொண்ட பாட் 2வின் விலை 39,999 ரூபாய், அதுவே 12+256ஜிபி கொண்ட போனின் விலை 42,999 ரூபாய்
ICICI வங்கி மற்றும் OneCard வாடிக்கையாளர்கள் INR 2,000 தள்ளுபடியைப் பெறலாம். அதேபோல 9 மாதங்கள் வரை கட்டணம் இல்லாத EMI வசதியும் உண்டு
வேறு நிறுவனத்தின் பழைய சாதனங்களுக்கு INR 3,000 மற்றும் OnePlus சாதனங்களுக்கு INR 5,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்