ஓய்வு பெற்ற பிறகு EPS திட்டத்தின் கீழ் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இந்த கேள்வி அனைத்து இபிஎஃப் உறுப்பினர்களுக்கும் இருக்கும்.
ஓய்வூதியத்தின் பலனைப் பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு இபிஎஸ்-இல் பங்களித்திருக்க வேண்டும். அதாவது 10 வருடங்கள் பணிபுரிந்து, இதில் பங்களிப்பு அளித்தால்தான், இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற முடியும்.
58 வயது நிரம்பிய ஊழியர்களுக்கு மட்டுமே ஓய்வூதிய பலன் கிடைக்கும்.
'எர்ளி பென்ஷனில்' 50 வயதிலேயே ஓய்வூதியத்தின் பலனைப் பெற முடியும். எனினும், இதில் 4 சதவிகித கழிப்புடன் ஓய்வூதியம் கிடைக்கும்.
அதாவது 56 வயதில் ஒருவர் 'எர்ளி பென்ஷன்' ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால், அடிப்படைத் தொகையில் 92 சதவீதம் மட்டுமே அவருக்கு ஓய்வூதியமாக கிடைக்கும்.
58 வயதுக்குப் பிறகு சாதாரண ஓய்வூதியத் தொகையைப் பெற முடியும்.
EPS ஓய்வூதியத்திற்கான சூத்திரம் இதுதான்: EPS ஓய்வூதியம் = சராசரி சம்பளம் x ஓய்வூதிய சேவை/70