நீர்ச்சத்து நிறைந்த வெள்ளை பூசணிக்காயில், வைட்டமின் பி, சி, கால்சியம், பொட்டாசியம் இரும்புச்சத்து, நார்ச்சத்து என அனைத்தும் உள்ளது.
பூசணி ஜூஸ் ரத்தத்தை சுத்தம் செய்யும் அற்புதமான டீடாக்ஸ் பானம்.
சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்களையும் சிறுநீரகக் கற்களையும் நீக்கும் ஆற்றல் பூசணி ஜூஸுக்கு உண்டு.
பூசணி ஜூசை வெறும் வயிற்றில் அருந்துவதால் கொலஸ்ட்ரால் எரிக்கப்பட்டு மாரடைப்பு அபாயம் குறையும்.
மிக குறைந்த கலோரி கொண்ட பூசணி ஜூஸ், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்தது. இதனால் உடல் பருமன் குறையும்.
அல்சர் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணிச்சாறு அருமருந்தாக இருக்கும்.
குறைவான கலோரி அதிக நார்ச்சத்து கொண்ட பூசணி ஜூஸ், நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அருமருந்து
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.