அட்டகாசமான 7 வண்ணங்களில் அறிமுகமான எலக்டிரிக் பைக்..!

S.Karthikeyan
Nov 03,2023
';


ஸ்டார்ட் அப் நிறுவனமான ஒகாயா, மோட்டோ ஃபாஸ்ட் என்கின்ற புதிய அதிநவீன எலக்ட்ரிக் ரக இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

';


இதற்கான முன்பதிவுகளும் தற்பொழுது இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் துவங்கி உள்ளது.

';


சுமார் 2500 முதல் 5000 ரூபாய் வரை முன்பணம் அளித்து இதற்கான முன்பதிவுகளை செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

';


ஒகாயா நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் வகை இருசக்கர வாகனம் cyan, rust orange, red, white, silver, mate green மற்றும் black என்ற 7 நிறங்களில் வருகின்றது.

';


ஆகவே இந்த வாகனத்தை தேர்வு செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு பெரிய அளவிலான சாய்ஸ் கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

';


மோட்டோ ஃபாஸ்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிமீ முதல் 130 கிமீ வரை சவாரி செய்யும் திறன் கொன்டது.

';


அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிமீ முதல் 70 கிமீ வரை இருக்கும் என்றும், இந்த அதிகபட்ச வேகம் மற்றும் சவாரி வரம்பு தினசரி பயன்பாட்டிற்கு போதுமானதாக இருக்கும் என்றும் நம்ப படுகின்றது.

';


மேலும் இந்த ஸ்கூட்டர் 8 டிகிரி கிரேடபிலிட்டிக்கு மதிப்பிடப்பட்டுள்ளது. எல்எஸ்பி பேட்டரி பேக் இருக்கையின் கீழ் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது.

';


மேலும் இந்த வாகனத்தில் ஒரு 7 இன்ச் தொடு திறன் கொண்ட டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

';


இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக்குகளும் முன் மற்றும் பின் என்று இரு சக்கரங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.

';


இந்திய சந்தையில் இந்த வண்டியின் விலை சுமார் 1,37,000 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story