தொழிலதிபரும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனம், ரீசார்ஜ் பிளான்களின் சில வாரங்களுக்கு முன்னதாக விலையை உயர்த்தியது
ஜியோவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிகரித்தது.
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டியாக புதிய திட்டங்களை கொண்டு வருகின்றன
தற்போது இரு நிறுவனங்களுமே 249 ரூபாய்க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை அறிவித்துள்ளன
இரண்டு திட்டங்களின் விலையும் 249 ரூபாய் என ஒன்றாக இருந்தாலும் அவற்றின் பலன்களில் சில மாறுதல்கள் உள்ளன
இரண்டு தொலைதொடர்பு நிறுவனங்களுமே தினசரி 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகின்றன
ஏர்டெல் திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது
ஜியோவின் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள். ஜியோவில் மேலும் 4 நாட்கள் மற்றும் 4 ஜிபி கூடுதல் டேட்டாவும் கிடைக்கும் என்பதால் ஜியோவின் திட்டத்தினால் பயனர்களுக்கு அதிக பயன் கிடைக்கும்
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவலின் உண்மைத்தன்மைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது