அசைவம் சாப்பிடுவதை நிறுத்துவது எப்படி?
அசைவம் விரும்பிகளாக இருந்து கொஞ்ச நாட்களுக்கு சைவம் பக்கம் செல்ல விருப்பமா?
அதற்கு உங்கள் டையட்டில் சில மாற்றங்களை கட்டாயம் செய்ய வேண்டும்
காலையில் கீரைகள், மதியம் காய்கறி சாம்பார், இரவில் துவையல் என குழம்பு வகைகளை பிரித்துக் கொள்ளுங்கள்
அதேபோல் இட்லி, அரிசி சாதம், வெரைட்டி சாதம் என சாப்பாட்டு வகைகளையும் பட்டியல் படுத்துங்கள்
இப்போது, மூன்று வேளைகளுக்குமான உணவு காம்பினேஷன்களை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்
அதன்படி, உங்களுக்கு பிடித்தமான உணவுகளை தினசரி மூன்று வேளைகளிலும் செய்து சாப்பிடுக் கொண்டே வாருங்கள்.
புதுப்புது உணவுகளை எல்லாம் தினசரி சேர்த்து, வித்தியாசமாக சமைத்துக் கொண்டு வாருங்கள். உள்ளூர், வெளியூர், வெளிநாடு என வகைகளை பிரித்துக் கொள்ளுங்கள்.
இந்த உணவுப் பட்டியல் உங்களை அசைவத்தில் இருந்து சைவம் பக்கம் திருப்பிவிடும். நீங்கள் அசைவத்தின் ருசியையே மறந்துகூட போக வாய்ப்பு இருக்கிறது.