பருப்பு வகைகள் அனைத்துமே புரதச்சத்து நிறைந்தவை. இவற்றில் காராமணி அசைவ உணவிற்கு இணையான சத்துக்களை கொண்டது.
காராமணியில் வைட்டமின்கள், தாது சத்துக்கள், மெக்னீசியம், புரதம் மற்றும் கால்சியம் ஆகியவை ஏராளமாக உள்ளன.
கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட காராமணி உதவும். கல்லீரல் பிரச்சனை எதுவும் உங்களை நெருங்காது.
கால்சியம் சத்து நிறைந்துள்ள காராமணி எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தி மூட்டு வலியை போக்கும்.
காராமணி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் என்பதால் இரத்த சோகைக்கு அருமருந்து.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் காராமணிக்கு உண்டு.
ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ள காராமணி புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டது
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஃபோலேட் என்ற இரும்பு சத்து காராமணியில் அதிகம் உள்ளது
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.