Amazon Pay: ரூ.2000 நோட்டிகளை வீட்டில் இருந்து மாற்றுவது எப்படி?
இந்திய ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் தாள்களை புழகத்தில் இருந்து திரும்ப பெற்றுவிட்டது.
மக்கள் வைத்திருக்கும் ரூபாய் தாள்களை செப்டம்பர் 30, 2023-க்கு வங்கிகளில் ஒப்படைக்க அறிவுறுத்தியிருந்தது
அதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில், மீண்டும் ஒருவாரம் காலவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது
இந்த சூழலில் Amazon Pay மூலம் ரூ.2000 நோட்டிகளை வீட்டில் இருந்து மாற்றுவது எப்படி? என்பதை பார்க்கலாம்.
Amazon நிறுவனம் இதற்காகவே ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ‘Cash Load at Doorstep’ என்ற இந்த திட்டம் மூலம் KYC செய்த வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்கிறது
மக்கள் கொடுக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் Amazon Pay Balance பணமாக அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும்.
ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நம்மால் Amazon Pay Balance கணக்கில் ஏற்றமுடியும்.
இதை செய்ய நீங்கள் Amazon KYC வாடிக்கையாளராக இருக்கவேண்டும். அதற்கு முதலில் நீங்கள் KYC செய்யவேண்டும்.
முதலில் 5 நிமிடங்கள் Video KYC செய்யவேண்டும். இதற்கு உங்களின் செல்பி புகைப்படம் மற்றும் PAN கார்டு தேவை. பின்னர் உங்களின் ஆதார் கார்டு எண்ணை உள்ளிட்டு அதன் பிறகு அமேசான் ஏஜென்ட் ஒருவரிடம் வீடியோ கால் பேசவேண்டும்.
KYC செய்ய எந்த ஒரு கட்டணமும் செலுத்தவேண்டியதில்லை. அதன் பிறகு Cash On delivery ஆர்டர் ஒன்றை Amazon மூலம் மேற்கொள்ளவும். உங்கள் டெலிவரியை எடுத்துவரும் ஏஜென்ட்டிடம் நீங்கள் வைத்திருக்கும் பணத்தை கொடுத்து Amazon Pay balance பணமாக உடனடியாக மாற்றிக்கொள்ளலாம்.