கிரெடிட் கார்டுகள் பல்வேறு வசதிகளைக் கொடுத்தாலும், சில நேரங்களில் வருவாயை மீறிய செலவுக்கு காரணமாகிவிடுகிறது
கிரெடிட் கார்டுகளுக்கு கட்டணம் செலுத்தும் நிலையில், பயன்படுத்தவில்லை என்றால், அதை வைத்துக் கொண்டிருப்பதில் எந்த லாபமும் இல்லை
ஒன்றுக்கு அதிகமாக இருந்தாலும், அதில் ஒன்றை திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று தோன்றுகிறதா?
இந்த 5 எளிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக கிரெடிட் கார்டை திருப்பிக் கொடுத்துவிடலாம்
கிரெடிட் கார்டை திரும்ப கொடுக்கும் முன், நிலுவைத் தொகை சில ரூபாய்களாக இருந்தாலும் அதை திருப்பிச் செலுத்த வேண்டும்
கிரெடிட் கார்டுகளை மூடும் அவசரத்தில், தங்களின் ரிவார்டு பாயிண்டுகளை மீட்டெடுக்க மறந்துவிட வேண்டாம்
காப்பீட்டு பிரீமியம், OTT மாதாந்திர கட்டணங்களை செலுத்துபவராக இருந்தால், அதற்கான மாற்று வழிகளை ஏற்பாடு செய்துவிடவும்
வங்கியிடம் கிரெடிட் கார்டை மூட விரும்புவதை தெரிவிக்க வேண்டும். கோரிக்கையை வங்கி பரிசீலிக்கும்
கிரெடிட் கார்டை மூடுவதற்கு முன்னர் அதை குறுக்காக வெட்டுவது அவசியமானது. தவறானவர்களின் கைகளில் கிடைத்தால், உங்கள் பெயரில் மோசடி செய்யப்படலாம்