உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க எவ்வளவு டேட்டா செலவாகும்?

S.Karthikeyan
Oct 13,2023
';


இந்த முறை உலக கோப்பை போட்டிகளின் பார்வையாளர்கள் எண்ணிக்கை முன்னெப்போதையும் விட அதிகம்

';


அதற்கு காரணம் டிஜிட்டல் மீடியாவின் வளர்ச்சியாக இருக்கிறது. தற்போது நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாக கிரிக்கெட் போட்டிகளை லைவாக பார்க்க முடியும்.

';


இந்த முறை உங்கள் போனில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலி மூலமாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பார்க்க நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டிய தேவையில்லை.

';


உங்களிடம் மொபைல் டேட்டா இருந்தால் மட்டும் போதும். குறிப்பிட்ட டவுன்லோடு வேகம் இருந்தால்தான் எந்த தடங்கலும் இல்லாமல் அதிக தரத்தில் போட்டியை பார்க்கலாம்

';


ஒரு கிரிக்கெட் போட்டியை பார்க்க எவ்வுளவு மொபைல் டேட்டா காலியாகும் என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளதா?

';


உலக கோப்பை போட்டிகளை ஸ்டாண்டர்ட் மற்றும் HD தரத்தில் ஸ்ட்ரீமிங் செய்ய நீங்கள் விரும்பினால், குறைந்தபட்ச டவுன்லோட் வேகம் 5.0 Mbps தேவைப்படும். அப்போதுதான் எந்த தடங்கலும் இல்லாமல் தெளிவாக போட்டிகளை நீங்கள் கண்டுகளிக்க முடியும்.

';


முழு HD தரத்தில் பார்க்க விரும்பினால், உங்கள் இணையத்தின் டவுன்லோடு வேகம் 8.0 Mbps அளவிற்கு இருக்க வேண்டும். இந்த வேகத்தில் இருந்தால் மட்டுமே இடைநிற்றல் இல்லாமல் போட்டிகளை நீங்கள் காண முடியும்.

';


உங்கள் வீட்டில் 4K தரத்தில் பார்க்கக் கூடிய தொலைகாட்சியோ அல்லது ஸ்மார்ட்போனோ இருந்து, அதில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க விரும்பினால், குறைந்தப்பட்சம் உங்களின் இணைய வேகம் 25.0 Mbps இருக்க வேண்டும்.

';


உதாரணத்திற்கு, HD தரத்தில் 5 Mbps வேகத்தில் மூன்று மணி நேரம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வேண்டுமென்றால், தோராயமாக நீங்கள் 1.875 GB டேட்டாவை செலவழித்தாக வேண்டும்.

';


அதுவே 8 Mbps வேகத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு 3 GB மற்றும் 25 Mbps வேகத்தில் 4K தரத்தில் பார்க்க விரும்பினால் 9.375 GB காலியாகும்.

';


கிரிக்கெட் போட்டிகளை ஆன்லைனில் ஸ்ட்ரீமிங் செய்யும் போது ஒரு மணி நேரத்திற்கு முழு HD-ல் பார்த்தால் 1.3ஜிபி, 720p-ல் பார்த்தால் 639 MB, அதற்கும் குறைவான தரத்தில் பார்த்தால் 249MB செலவாகும் என ACT ஃபைபர்நெட் கூறுகிறது.

';


இந்த கணக்கீட்டை வைத்துப் பார்க்கும் போது, டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியில் மூன்று மணி நேரம் போட்டியை பார்க்க வேண்டுமென்றால், 4ஜிபி டேட்டா உங்களுக்கு தேவைப்படும்.

';


ஆகையால் எவ்வுளவு நேரம் நீங்கள் போட்டியை பார்க்கப் போகிறீர்களோ, அதை வைத்து எவ்வுளவு மொபைல் டேட்டா உங்களுக்கு தேவைப்படும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

';

VIEW ALL

Read Next Story