அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் என்ற தள்ளுபடி விற்பனை இன்று முதல் பிரைம் பயனர்களுக்கு தொடங்கியது.
அமேசான் நிறுவனம் இம்முறை பிரைம் ஷாப்பிங் பதிப்பை கொண்டுவந்துள்ளது.
இந்த வசதியை ஆண்ட்ராய்ட் மொபைல் செயலியிலும், அதன் அமேசான் இணையத்தளத்திலேயே பெற முடியும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
பிரைம் ஷாப்பிங் என இதன் பெயரில் உள்ளதை போன்றே விற்பனையில் பொருள்களை ஷாப்பிங் செய்வதற்கே இந்த திட்டம் பயன்படும்.
இந்த பிரைம் ஷாப்பிங்கை நீங்கள் வருடத்திற்கு ரூ.399 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் மூலம் கட்டணமில்லா ஷிப்பிங், ஒரு நாளில் டெலிவரி மற்றும் பல ஷாப்பிங் பலன்கள் கிடைக்கும்.
ஆனால், இந்த திட்டத்தின் மூலம் மற்ற பிரைம் பலன்களான பிரைம் வீடியோ, பிரைம் ரீடிங், பிரைம் கேமிங் போன்றவை கிடைக்காது.