பாதுகாப்பான முதலீட்டுடன் சிறந்த வருமானத்தை அளிக்கும் வகையில், தற்போது தபால் அலுவலகத்தால் நடத்தப்படும் சிறு சேமிப்புத் திட்டங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.
மத்திய அரசு தபால் அலுவலக RD மீதான வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் என்ற அளவில் 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
போஸ்ட் ஆபிஸ் ஆர்டியில் மாதம் ரூ. 5,000 முதலீடு செய்தால், அதன் முதிர்வுக் காலத்தில் மொத்தம் ரூ.3 லட்சத்தை டெபாசிட் செய்வீர்கள். அதற்கான வட்டி 6.7 சதவீதமாக இருக்கும்.
வட்டி 6.7 சதவீதமாக இருக்கும் நிலையில் முதலீட்டு தொகைக்கும் ரூ.56,830 வட்டி கிடைக்கும். அதாவது ஐந்து வருடங்களில் உங்கள் மொத்த நிதி ரூ.3,56,830 ஆக இருக்கும்.
உங்கள் RD கணக்கை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தால், 10 ஆண்டுகளில் நீங்கள் டெபாசிட் செய்த தொகை ரூ.6,00,000 ஆக இருக்கும்.
டெபாசிட்டுக்கான வட்டித் தொகை 6.7 சதவீதமாக ரூ.2,54,272 ஆக இருக்கும். 10 ஆண்டுகளில் உங்கள் மொத்த நிதி ரூ.8,54,272 ஆக இருக்கும்.
கணக்கு ஓராண்டு செயல்பாட்டில் இருந்த பிறகு, டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50 சதவீதம் வரை கடன் பெறலாம். இருப்பினும், கடனுக்கான வட்டி விகிதம் வட்டி விகிதத்தை விட 2 சதவீதம் அதிகம்.