மொபைல் போன்களில் தண்ணீரில் சென்றவிட்டால் மக்கள் பொதுவாக அரிசியில் ஊற வைத்து சரி செய்கின்றனர்.
இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் ஐபோனில் தண்ணீர் சென்றுவிட்டால், இப்படி செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
ஐபோன் பயனர்களுக்கு செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்களை ஆப்பிள் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் போனை அரிசியில் வைத்தால் அதில் உள்ள தூசிகள் மொபைலை சேதப்படுத்த வாய்ப்புள்ளது.
ஐபோன் பயனர்கள் தவிர்க்க வேண்டிய மற்ற இரண்டு விஷயங்கள் உள்ளன. ஐபோனில் தண்ணீர் போய் இருந்தால், பருத்தி துணி அல்லது காகிதங்கள் போன்றவற்றை பயன்படுத்த கூடாது.
இதற்கு பதில் சற்று சூடான இடத்தில் ஐபோனை வைக்க நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஐபோனில் உள்ள தண்ணீரின் அளவை பொறுத்து நேரம் கூடும்.
ஒருவேளை ஐபோனில் தண்ணீர் போய் இருந்தால் உடனே சார்ஜ் போடுவதை தவிர்க்குமாறு கேட்டு கொண்டுள்ளது.
ஐபோன்கள் IP68 மதிப்பீட்டுடன் வருகின்றன, அவை குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே தூசி மற்றும் தண்ணீரை தடுக்கும்.
ஜாக்கிரத்தை, ஐபோனில் ஏதேனும் பிரச்சனை என்றால் புது ஐபோனை வாங்குவதை அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.