கற்றாழையில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால் இவை, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும்.
கற்றாழை இரத்த சர்க்கரை அளவை திறம்பட குறைக்க உதவுவதால், இவை டைப் 2 நீரிழிவு நோயை கட்டுபடுத்த உதவும்.
கற்றாழையில் வைட்டமின் சி உள்ளதால், இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
கற்றாழை ஜெல்லை கூந்தலில் தொடர்ந்து படாவி வந்தால், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும், நீளமாக வளர உதவும்.
கற்றாழை ஒரு சிறந்த மாய்ஸ்டரைசர். இதன் காரணமாகவே அழகுசாதன பொருட்களில் அதிகளவில் கற்றாழை பயன்படுத்தப்படுகிறது.
கற்றாழை ஜூஸை குடித்துவந்தால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடை குறைந்துவிடும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.