திமுக சிட்டிங் அமைச்சர்களில் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் யார்?
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்து இப்போது திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருப்பவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
தற்போதைய திமுக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கிறார். 1984-ம் ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.
எம்.ஜி.ஆரின் தீவிரமான ரசிகர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். அ.தி.மு.க சந்தித்த முதல் தேர்தலிலேயே சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் ராமச்சந்திரன். தொடர்ந்து, 1980, 84-ல் சாத்தூர் தொகுதியிலும் 89-ல் விளாத்திகுளம் தொகுதியிலும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996ல் திமுகவுக்கு வந்த அவர் இப்போது வருவாய் பேரிடர் துறை அமைச்சராக உள்ளார்.
1991-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருமயம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரான இவர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். பின்னர் தி.மு.கவில் இணைந்த இவர், தற்போதும் அதே தொகுதியில், வெற்றிபெற்று சட்ட அமைச்சராகியிருக்கிறார் ரகுபதி.
தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக உள்ளார். அ.தி.மு.க சார்பில் 2001 மற்றும் 2006-ல் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010-ல், தலைமை மீதான மனக்கசப்பின் காரணமாக, திமுகவில் சேர்ந்தார்.
போக்குவரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இராஜகண்ணப்பன், அ.தி.மு.க சார்பில்,1991 தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை என முப்பெரும் துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்தார். அ.தி.மு.கவில் ஜெயலலிதாவுக்குப் பிறகு செல்வாக்கு மிக்க நபராகவும் விளங்கினார். இப்போது திமுகவில் இருக்கிறார்.
2001 மற்றும் 2006 தேர்தல்களில் சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார். வட சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பொறுப்பு வகித்த சேகர்பாபு, 2011 ல் திடீர் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
2010-ல் அ.தி.மு.கவில் இணைந்த செந்தில்பாலாஜிக்கு, 2011-ல் சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பதவியேற்றார். 2016 தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தினகரன் அணியில் இருந்தார். 2018 டிசம்பரில் தி.மு.கவில் இணைந்தார். இப்போது இலாக்கா இல்லாத அமைச்சராக சிறையில் உள்ளார்.