மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டி20யில் சதம் அடித்து அசத்தி உள்ளார் மேக்ஸ்வெல்.
ஓவலில் நடந்த இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 120 ரன்களை விளாசி உள்ளார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் வரலாற்று சாதனையை சமன் செய்தார் க்ளென் மேக்ஸ்வெல்.
மேக்ஸ்வெல் டி20 கிரிக்கெட்டில் 5வது சதத்தை அடித்து, ரோஹித்தின் சாதனையை சமன் செய்துள்ளார்.
மேலும் 4வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு, சூர்யகுமார் 2022ல் இங்கிலாந்துக்கு எதிராக 117 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருந்தார்.
25 பந்துகளில் அரை சதத்தை அடித்து, 55 பந்துகளில் 120 ரன்கள் அடித்துள்ளார் மேக்ஸ்வெல் .
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 241 ரன்கள் குவித்தது.
மேற்கிந்திய தீவுகள் 207 ரன்கள் மட்டுமே அடிக்க, ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.