கட்சி தாவல் தடை சட்டம் என்றால் என்ன?
கட்சி தாவல் தடை சட்டம் என்பது 1985 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் கொண்டு வரப்பட்டது.
அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்பட்ட 52வது திருத்தத்தின் மூலம் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
அதன்படி, எம்பி, எம்எல்ஏ தாமாக முன்வந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியில் இருந்து விலகினால் அவர் தனது உறுப்பினர் பதவியை இழப்பார்.
எம்பி அல்லது எம்எல்ஏ நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவுக்கு மீறி வாக்களித்தாலும், புறக்கணித்தாலும் உறுப்பினர் பதவியை இழப்பர்
ஒருவர் எம்எல்ஏ-வாக இருக்கும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் எம்எல்ஏ அல்லது எம்பியாக இருக்கும் வரை அவர் அந்த கட்சி உறுப்பினராகவே கருதப்படுவார்
அதனால் எம்எல்ஏ அல்லது எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் கொறடாவின் உத்தரவுக்கு அவர் கட்டாயம் கீழ்படிந்து நடக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் கட்டளையை மீறினாலோ அல்லது வேறு கட்சியில் சேர்ந்தாலோ தாங்கள் வகிக்கும் உறுப்பினர் பதவியை இழந்துவிடுவர்
ஒரு கட்சியில் இருக்கும் எம்எல்ஏ/எம்பி மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வேறு கட்சிக்கு மாறினால், புதிய கட்சி தொடங்கினால் பதவி பறிபோகாது.