இங்கிலாந்து புறப்பட்ட சாஹல்..!
ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சாஹல் புறக்கணிக்கப்பட்டார்.
இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் அவர், இதனை வெளிப்படையாகவே சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தினார்.
இவரை தவிர்த்ததன் விளைவாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையை இருமுறை இழந்துள்ளது.
தற்போது ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடரிலும் சாஹலை தேர்வு செய்யாமல் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா புறக்கணித்துள்ளார்.
அண்மையில் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
இதுவரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல் 121 விக்கெட்டுகளையும், 72 டி20 போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
சில நேரங்களில் கூக்ளி பந்துகளை வீசுவதில் சொதப்பினாலும், முக்கியமான சூழல்களில் சாஹலின் செயல்பாடுகள் வேறு மாதிரி இருக்கும்.
இவரை உலகக்கோப்பை அணியில் புறக்கணித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உலகக்கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்ட கோபத்தில் சாஹலை டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த தொடங்க உள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்றும் வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் கெண்டி அணிக்காக விளையாட சாஹல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சாஹல் பேசுகையில், இது மிகப்பெரிய சவால் தான். கவுண்டி போட்டிகளில் விளையாடுவதற்காக ஆவலாக காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.