ரிஷப் பந்த் தற்போது டெல்லி கேபிடல்ஸ் ஏற்பாடு செய்த பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறார்.
2022 டிசம்பரில் ஏற்பட்ட பயங்கரமான கார் விபத்திற்கு பிறகு பந்த் குணமாகி வருகிறார்.
ஐபிஎல் தொடங்குவதற்கு முன் முழு உடற்தகுதியை பெற கடுமையாக உழைத்து வருகிறார்.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வந்தார் பந்த்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பந்த் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார் என்று கூறப்படுகிறது.
பேட்டிங் மற்றும் கேப்டன்சி பணிகளில் முழு கவனம் செலுத்த உள்ளார்.
நான் நம்பர் 4ல் பேட்டிங் செய்கிறேன் என்று பந்த் கூறியதா ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பந்த் இல்லாததால் டேவிட் வார்னர் கேப்டனாக செயல்பட்டார்.
26 வயதான பந்த் இந்தியாவுக்காக 33 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.