இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் ஒரு அணிக்காக 250 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் ஆட்டத்தின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
தோனி (263 போட்டிகள்), ரோஹித் சர்மா (256 போட்டிகள்), மற்றும் தினேஷ் கார்த்திக் (254 போட்டிகள்) ஆகியோர் ஐபிஎல்லில் 250 ஆட்டங்களுக்கு மேல் விளையாடியுள்ளனர்.
ஆனால் அவர்கள் ஐபிஎல்லில் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி உள்ளார். இவர்களில் கோலி ஒரே அணிக்காக விளையாடி உள்ளார்.
இதுவரை ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் 7924 ரன்களை அடித்துள்ளார் விராட் கோலி.
இந்நிலையில், ஐபிஎல்லில் 8000 ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் என்ற வரலாறு படைக்கும் வாய்ப்பு கோலிக்கு உள்ளது.
விராட் கோலியை தவிர உலகில் எந்த வீரரும் ஐபிஎல்லில் 7,000 ரன்களைக் கூட எடுத்தது இல்லை.
இந்த ஆண்டு 13 போட்டிகளில் விளையாடி 661 ரன்களுடன் ஆரஞ்சு கேப்பை பெற்று நம்பர் 1 இடத்தில் உள்ளார்.
ஆர்சிபி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கேவுடன் விளையாட உள்ளது. இந்த போட்டியில் விராட் இந்த சாதனையை நிகழ்த்துவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.