27 வருஷத்தில் இதுவே முதல்முறை - இங்கிலாந்து சோகம்..!

S.Karthikeyan
Oct 26,2023
';


இங்கிலாந்து நடப்பு சாம்பியனாக இந்தியாவில் நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அடியெடுத்து வைத்தது

';


இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்று பலராலும் இந்த தொடருக்கு முன்னதாக கணிக்கப்பட்டது.

';


ஆனால் 5 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி நான்கு தோல்விகளை அடைந்துள்ளது

';


தற்போது புள்ளி பட்டியலில் ஒரு வெற்றியுடன் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.

';


இனிவரும் நான்கு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் கூட அரையிறுதி வாய்ப்பு என்பது ஒரு எட்டா கனி தான்

';


இலங்கைக்கு எதிரான போட்டியிலும் மோசமான தோல்வியை சந்தித்து பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

';


இங்கிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக 33.2 ஓவர்களிலேயே 156 ரன்களுக்கு சுருண்டது.

';


அதன் பின்னர் அதனை எளிதாக துரத்திய இலங்கை அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 160 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

';


இப்படி இங்கிலாந்து அணி அடைந்த மாபெரும் தோல்விக்கு பிறகு உலகக் கோப்பை வரலாற்றில் அவர்கள் ஒரு மாபெரும் பின்னடைவையும் சந்தித்தது.

';


இலங்கை அணிக்கெதிராக இன்று அவர்கள் பெற்ற தோல்வியோடு சேர்த்து தொடர்ச்சியாக இந்த தொடரில் மூன்று தோல்விகளை பதிவு செய்துள்ளனர்.

';


இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணியானது 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் தான் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தது.

';


அதன்பிறகு 27 ஆண்டுகள் கழித்து உலக கோப்பை வரலாற்றில் தற்போது ஹாட்ரிக் தோல்வியை இங்கிலாந்து அணி முதல்முறையாக சந்தித்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story