உங்களை பயங்கர புத்திசாலியாக்கும் 'சூப்பர்' உணவுகள் இவைதான், கண்டிப்பா சாப்பிடுங்க

Sripriya Sambathkumar
Oct 27,2023
';

மீன்

மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு மிகவும் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிகம் உள்ளன.

';

பெர்ரி

அழற்சி மற்றும் இறுக்கத்தை குறைக்கும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ள பெர்ரிகள் மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தவை.

';

முழு தானியங்கள்

ஓட்ஸ், பார்லி போன்ற வைட்டமின் பி அதிகம் உள்ள முழு தானியங்கள் நம் நினைவாற்றலை மேன்மையாக வைத்திருக்க முடியும்.

';

கீரை

கீரை வகைகளில் வைட்டமின் கே, லூடின், ஃபோலேட் மற்றும் பீடா கரோடின் அதிகமாக உள்ளன. இவை மூளை செயல்பாட்டிற்கு தேவையான ஊட்டச்சத்துகள்.

';

உலர் பழங்கள்

வால்நட், பாதாம், முந்திரி, ஆளி விதைகள், பூசணி விதைகள் போன்ற உலர் பழங்களும் விதைகளும் சிறந்த நினைவாற்றலை அளிக்கும் ஆற்றல் கொண்டவை.

';

காபி

காபி சிறந்த மனநிலையையும், எச்சரிக்கை தன்மையையும், மூளைக்கு சுறுசுறுப்பையும் அளித்து மனச்சோர்வை நீக்கும் பானமாகும்

';

ஆரஞ்சு

வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு பழங்கள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி அறிவாற்றல் திறன்களை வளர்க்கின்றன.

';

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் சாப்பிடுவது மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவை அதிகரித்து மூளை செயல்பாடை விரிவுபடுத்துகிறது

';

முட்டை கரு

முட்டை கருவில் உள்ள கூறுகள் மூளை செயல்பாடுகளை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கின்றன.

';

VIEW ALL

Read Next Story