கௌதம் கம்பீர் ஐபிஎல்லில் 4200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார், அவரது அதிகபட்ச ஸ்கோர் 93 ஆகும்.
ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் 189 ஐபிஎல் போட்டிகளில் 3412 ரன்களைக் குவித்துள்ளார். இருப்பினும், அவரது அதிகபட்ச ஸ்கோர் 87 ஆகும்.
ராபின் உத்தப்பா ஐபிஎல்லில் கிட்டத்தட்ட 5000 ரன்களைக் குவித்துள்ளார். இருப்பினும், அவரது அதிகபட்ச ஸ்கோராக 88 உள்ளது.
இஷான் கிஷான் 92 ஐபிஎல் போட்டிகளில் 2300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். ஆனால், ஐபிஎல் தொடரில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 99.
ஆல்-ரவுண்டரான க்ளென் மேக்ஸ்வெல் 126 போட்டிகளில் 2700 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 95 ஆக உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2015 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் முக்கியத் தூண். ஆனாலும் சதம் அடித்தது இல்லை.
ஆண்ட்ரே ரஸ்ஸல் 113 போட்டிகளில் 2320 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 88 ஆகும்.
ஷ்ரேயாஸ் ஐயர் 102 ஐபிஎல் போட்டிகளில் 2776 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இருப்பினும், அவர் ஒரு சதமும் அடிக்கவில்லை.
ஃபாஃப் டு பிளெசிஸ் ஐபிஎல்லில் 4,171 ரன்கள் எடுத்துள்ளார். அவருடைய அதிகபட்ச ஸ்கோரான 96 ரன்கள்.
எம்எஸ் தோனி ஐபிஎல்லில் 251 போட்டிகளில் விளையாடி 5000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இருப்பினும், அவரது அதிகபட்ச ஸ்கோர் 84 ஆக உள்ளது.