விராட் கோலியை இந்திய அணியில் எடுக்க மறுத்த தோனி!
விராட் கோலியை 2008 ஆம் ஆண்டு இந்திய அணியில் எடுக்க தோனி மறுத்துவிட்டாராம்
அவருடைய ஆட்டம் சிறப்பாக இருந்தபோதும், இந்திய அணியில் சேர்க்க தோனி, கேரி கிரிஸ்டன் மறுத்துள்ளனர்
இருப்பினும் அப்போதைய இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் விராட் கோலியை தேர்வு செய்துவிட்டார்
இதனால் ஆத்திரமடைந்த இப்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் சீனிவாசன், வெங்சர்க்காரை அந்த பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
விராட் கோலிக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் ஆடிய பத்ரிநாத்தை இந்திய அணியில் சேர்க்க சீனிவாசன், தோனி கூறியுள்ளனர்.
அவர்களின் கோரிக்கைக்கு திலீப் வெங்சர்க்கார் மறுப்பு தெரிவித்து, விராட் கோலியை இந்திய அணியில் சேர்த்திருக்கிறார்.
அப்படி இந்திய அணிக்குள் வந்த விராட் கோலி தான் இப்போது இந்திய அணியின் நட்சத்திரமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதே தோனி தான், இம்முறை கோப்பையுடன் ஆர்சிபி வர வேண்டும் என விராட் கோலிக்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.